பெண்கள் பர்தா அணிவது தேவையற்றது, இந்த பழக்கத்தை நிறுத்த வேண்டும் என காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பிரதீபா கீழ் கண்டவாரு தன் திருவாய் மலந்துள்ளார் "முகலாயர்கள் படையெடுப்பின் போது பெண்கள் தங்களை மறைத்துக் கொள்வதற்கு 'பர்தா' வை பயன்படுத்தியதாகவும், அந்தப் பழக்கம் சுதந்திர இந்தியாவில் தேவை இல்லை' என்றும் அவர் கருத்து தெருவித்ததாக பத்திரிக்கை செய்திகள் கூறுகின்றன (ஹிந்து 18.05.07)
மரியாதைக்குரிய ஆளுநரின் கருத்து வரலாற்றுத் தவறு என்பதை வரலாற்று ஆசிரியைகள் பலர் ஆதாரத்துடன் எடுத்துரைத்துள்ளார்காள். உதாரண்மாக ' ராஜஸ்தான்' வரலாற்று ஆய்வு நிறுவன இயக்குநர் டாக்டர் வர்ஷா கீழ்கண்டவாறு ஆளுநருக்கு மறுப்புரை வழங்கியுள்ளார்
"முகலாயர்களின் படையெடுப்பு நிகழ்வதற்கு வெகு காலத்துக்கு முன்பே பர்தா முறை இந்திய கலாச்சார பழக்கத்தில் இருந்து வந்தது. 11 வது நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட சித்தூர்கார் கோட்டையில் பெண்களுக்கென்று பிரத்யோக 'ஜனன'( Zanana) அறைகள் கட்டபட்டிருந்தன என்பதற்க்கு ஆதாரங்கள் உண்டு. மேலும் ராஜபுத்திர அரசர்களின் முடிசூட்டு விழாக்களிள் பெண்கள் கலந்துகொள்வதற்கு அனுமதிக்கபடவில்லை. அவர்கள் பெரும்பாலும் வீடுகளிலேயே அடைபட்டு கிடந்தார்கள். முகலாயர்களின் படையெடுப்புக் காரணமாகத்தான் பர்தா முறை அனுசரிக்கப்பட்டது என்று கூருவது வரலாற்றை குறுகிய கண்ணேட்டதில் பார்பதற்க்கு ஒப்பாகும்" மேலும் அவர் " முகலாயப் பெண்களின் கலாச்சார கண்ணியத்தை பின்பற்றியே இந்துப் பெண்கள் முக்காடிட்டிருக்கலாம், முகலாயர்களை கண்டு அஞ்சியல்ல" என கூறினார்( ஆதாரன் : CNN-IBN)
மேற்கண்ட வரலாற்றுக் குறிப்புகள் போக மரியாதைக் குரிய ஆளுநரிடம் நாம் கேட்க விரும்பும் கேள்விகளும், விளக்கங்களும் இவைதான்
1. முகலாயர்கள் படையேடுப்பின் போது அவர்களை எதிர்த்து ராணா பிரதாப் தலைமையில் போரிட்டவர்கள் வீரமுள்ள ஆண் படை வீரர்கள் என்று ஆளுநர் கூறுகிறாரா? இல்லை எதிரியை வாள் முனையில் வீழ்த்த முடியாது என்பதற்காக முக்காடிட்ட பெண்களை போர்க்களத்திற்கு அனுப்பி எதிரிகளின் இதயத்தை காயப் படுத்தியதாக புதிய வரலாறு கூறுகிறாரா ஆளுநர்?
2. மரியாதைக்குரிய ஆளுநர் ஆட்சி செய்யும் மாநிலத்தில் இன்றும் இந்து பெண்கள் தலை முக்காடு போட்டிருப்பது முகலாயர்களுக்கு பயந்துதானா? முகலாயர்களிம் காலத்தில் நடந்த கற்பழிப்பு, வழிபறிக் கொள்ளைகள் புள்ளி விபங்களையும் சுதந்திர இந்தியாவில் நிமிடத்திற்கு நிமிடம் நடக்கும் கற்பழிப்பு, வழிபறிக் கொள்ளைகள் புள்ளி விபரங்களையும் வெள்ளை அறிக்கையாக வெளியிட ஆளுநர் தயாரா?
3. முக்காடு போட்ட நட்சத்திர பெண்கள் பட்டியலில் மகாத்மா கந்தியின் மனைவி கஸ்தூரி பாயும், நேருவின் மனைவி கமலா நேருவும், முன்னால் முதல்வர் இந்திரா கந்தியும் அடங்குவர். இத்தாலிய நாட்டிலிருந்து குடிபெயந்து வந்து இந்திய கலாச்சாரத்தை ஏற்றுக் கொண்ட சோனியா காந்தியும் தலை முக்காடு போட்டு கொள்கிறார். இவர்கள் எல்லாம் யாருக்கு பயந்து முக்காடு போட்டதாக பிரதீபா சொல்கிறார்.
4. பிரதீபா பட்டீல் பாட்டி வயதிலும் தலையில் முக்காடு போட்டு தான் எங்கும் காட்சியளிக்கின்றார். முன்னேற்றத்திற்கு தலை முக்காடு தடையாக இருக்கும் என்பது உண்மையானால் அவை ஆளுநராக உயரும் அளவிற்க்கு அவருக்கு தலை முக்காடு ஏன் தடையாக இல்லை என்பதற்க்கு விளக்கம் கூருவாரா?
5. சொல்லுக்கும் செயலுக்கும் சம்மந்தமில்லாமல் பொது வாழ்வு வாழும் பிரதீபா பாட்டீல் பன்முக சமூக மக்கள் வாழும் நாட்டின் ஜனாதிபதி பதவிக்கு வருவது களங்கமும், அவமானமும் ஆகும்.
6. 1400 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இஸ்லாமிய நாகரீக பண்பாடே முஸ்லிம் பெண்கள் அனுசரிக்கும் பர்தா முறை . அது முகலாயர் காலத்தில் தோன்றிய வழக்கமும் அல்ல, ராஜபுத்திரர்கள் பழக்கமும் அல்ல. அது பற்றி கருத்து கூற பிரதீப பாட்டீலுக்கு எந்த தகுதியும் இல்லை. பிறருக்கு அறிவுரை கூறுமுன் அவர் திருந்தி. அவை வீட்டையும் திருத்தி கொள்ளாட்டும் .
நன்றி: TMMK
Tuesday, June 19, 2007
Subscribe to:
Comments (Atom)